Tamil Mokkai jokes collection-5

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
————————————————————
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
– ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
—————————————————————

என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை .
——————————————

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது!!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,

லேடீஸ் ஃபிங்கர் , ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31 க்கும்,

ஜனவரி 1 க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால் ,

ஜனவரி 1க்கும் ,

டிசம்பர் 31க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.
——————————————-
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .

ஆனா…

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும் …!!
———————————

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா ,

சத்தம் போட்ட கொலுசு வருமா?
——————————–
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

——————-
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
—————————–
என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும் ,

வெயில் அடிச்சா ,

திருப்பி அடிக்க முடியாது .
——————————-
இளநீர்லயும் தண்ணி இருக்கு,

பூமிலயும் தண்ணி இருக்கு .

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .
—————————–
உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
——————–
ஓடுற எலி வாலை புடிச்சா

நீ ‘ கிங்’ கு

ஆனா…

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.
———————

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
——————–

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால் …

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
—————————

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

“Tea”க்கும் “Cofee”க்கும் என்ன வித்தியாசம்?
“Tea”ல ஒரு “e” இருக்கும். “Coffee” ல 2 “e” இருக்கும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.