November 2012 TamilJokes collections

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்!

விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க…

எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!”

“சின்ன பிரச்சினைன்னா எது..?”

““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது

..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…!”

“பெரிய பிரச்சினைன்னா..?”

“இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை…
ஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..!!!???
===========
…! .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…

அப்புறம்?

அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,

நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!
==============
என் பொண்டாட்டிய ஒரு வருஷமா காணலைங்க ஐய்யா..??
அதை ஏன்யா ஒரு வருஷத்துக்கு அப்புறம் வந்து புகார் கொடுக்கறே…!!!??

முதல் வருடத்த கொண்டாடனுமுன்னுதான் ஐய்யா….!!!???..
===============
கலவர கும்பலை அடக்க வந்த இன்ஸ்பெக்டர்
போதையில இருக்கார்னு எப்படிக் கண்டுபிடிச்சே?

ஸ்பாட்ல ‘சார்ஜ்’ னு கத்தறதுக்கு பதிலா ‘லார்ஜ’ னு
கத்திட்டாரு!
==================
சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?

9 மணிக்கு..

அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?

ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
============
படிச்ச பையனா இருக்கே ஏன் சொந்தமா ரூபாய் நோட்டு அடிச்சே?

நான் சுயநிதி கல்லூரியில படிச்சேன் சார்….
==============
நீங்க நடிச்ச சீரியலைப்பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்?

சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!
==============
“போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே.. மறந்துட்டியா?”

“சேச்சே.. வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?”
===================
எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க?

நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க!
=======================
அந்த பேஷண்டிடம் கிட்னியைத்தான் திருடியாச்சே,
அப்புறம் என்ன ப்ராப்ளம்?

அவர் கிட்னியில் ‘இந்த கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ ன்னு எழுதியிருக்கு டாக்டர்!
=================
இந்த ஜாதகருக்கு பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்…!

அப்படின்னா…இந்த ஜாதகத்தை வெச்சுக்கிட்டு இரண்டு லட்சம் பணம் கொடுங்க ஜோசியரே…!
=======================
“நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில
எப்படி பேசணும் தலைவரே!”

“நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க.”

“அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா…”

“நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.”
===================
கட்சிப் பொருளாளர் பொய்க்கணக்கு காட்டுறதை தலைவர் எப்படிக் கண்டு பிடிச்சார்?

பிரசார பீரங்கிக்கு வெடிமருந்து வாங்கின செலவுன்னு ஒரு தொகையை கணக்குல எழுதியிருந்தாராம்!
============
நம்ம ஓட்டலிலே சாப்பிட்ட ஒருவர் பர்மிஷன் கேட்கிறார் சார்!

எதுக்கு?

சாப்பாட்டிலே இருக்கற கல்லை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போகணுமாம், துணி துவைக்கிறதுக்கு!
==============
“பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது?”

“வீட்டிலே போய் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே!”
==================
“என் மனைவி என்னை லூஸூ,முட்டாள்,கிறுக்குன்னு
அடிக்கடி திட்டுறா..உங்க மனைவி எப்படி..?”

“உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவு தெரியாதுங்க!”
================
“என்னங்க… டிரைவர் இல்லாம பஸ் வருது?”

“ஐயய்யோ ! சீட்டுக்குக் கீழேயிருந்த ஓட்டையில்
அவ்ரே விழுந்துட்டார் போலிருக்கு!”
===============
‘என்னாலும் என் மகனாலும் முடியாததை என் பேரன்
சாதித்துவிட்டான்’னு தலைவர் சொல்றாரே.அப்படி
என்னய்யா அவன் செய்துட்டான்?”

“மூணாங் ” கிளாஸ் பாஸ் பண்ணிட்டானாம்..!:
============
அந்த ஜோசியர் உங்களை பிரச்னைல மாட்டிவிடப்
பார்க்கிறாரா….எப்படி?”

“எனக்கு ராசியான கல் எதுன்னு கேட்டா,
“கிரானைட்”னு சொல்றாரே..!”

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.