அப்பா நான் லவ் பண்ணறேன்

பெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் .. அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் …

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க… ONLINEல ஜாலியா இருங்க… E – BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க… G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு… எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு…. அவ்வுளவுதான்….

பெண் : !!!!!

 

 

முதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ……

இந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும் அனுசரணையா நடந்துக்கணும் ….
பெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் … அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடது ….
காலைல சீக்கிரமா எழுந்துடணும் …….

மணப்பெண் கதவை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள் ….
எல்லாரும் வந்து கலந்துக்கோங்க – இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல ” உபன்யாசம்”

 

 

Doctor and Nurse Jokes

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!

எப்படி?

தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல
போடவான்னு கேட்டாரே..?
———————————————————————————————–
டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

———————————————————————————————–
டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

———————————————————————————————–
கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!
———————————————————————————————–
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!

என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
———————————————————————————————–
நோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்…
———————————————————————————————–
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
———————————————————————————————–

 

husband and wife dinner

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!

 

 

ஒரு டாஸ்மாக் பாரில்

“தம்பி!! ஒரு பீர்!”

“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”

“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”

“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”

“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”

“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”

“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

 

எளிய முறையில் மிமிக்கிரி கலை

—– எழுதியவர் – தமிழ்செல்வி

கார்த்திக் :-

வயில் பாக்கு போட்டு கொள்ளவும் (கீழே துப்பவோ விழுங்கவோ கூடாது)இப்போது வார்த்தைகளின் நடுவில்…உ.ஊ.உ.ஊ. அல்லது ஏ..ஏ..எ.எ. என சேர்த்துக் கொள்ளவும் . இப்போது ஏ..ஏ..ஏய் மிஸ்டர்ர். சந்திர .. மோளி என்று மெதுவாக‌ வார்த்தையை வெளியிடவும் , கார்த்திக் வாய்ஸ் ரெடி.

விஜ‌ய‌காந்த் :-

ஹஸ்கி வாய்சில் பேச முயற்சி செய்யும் போது கண்டிப்பாக அங்… ஏ புள்ள‌…. என்ற‌ வார்த்தையை சேர்த்து கொள்ள‌வும் . ஒவ்வ‌ரு வார்த்தையின் முடிவிலும் ங் என்ற‌ உச்ச‌ரிப்பு வ‌ரும்வ‌ரை முய‌ற்சி செய்ய‌வும் . மூக்கு பொடியை கையில் எடுத்தார் போல் பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்து கொள்ளவும் இப்போது தலையை ஆட்டி கொண்டே பேசினால் விஜயகாந்த் வாய்ஸ் ரெடி..

ம‌ன்மோக‌ன் சிங் :-

மேல் உத‌டையும் கீழ் உத‌டையும் காற்று போக‌த‌வாரு இருக்கமாக இணைத்து கொள்ள‌வும் . துக்க‌ வீடுக‌ளில் கைக‌ளை கோர்த்து நிற்ப‌து போல‌ நிற்க‌வும் . ம‌ன்மோக‌ன் சிங் வாய்ஸ் ரெடி .. :)

==========================

கிட்னாப் சிங்
வேறு வழியே இல்லததால் காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்!!

முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை!!

# அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை –

வரலாறு முக்கியம் அமைச்சரே!

 

 

இரண்டு கோழி தருகிறேன்

Tamil Jokes

ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்…. இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே….. எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ? ?

{ ம்ம்ம்….. இப்படித்தான் ரிலாக்ஸா சிரிக்கணும் }

================================================

தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
————————————————————————————

கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…

 

 

இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,

அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருடையது. என் மனைவியைக்
காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”

அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய்
நில்லுங்கள்”!!

 

 

கணவனும் மனைவியும்

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.

மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது?.

கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!!

======================================

மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்………….!!!

 

மிஸ்டர் எக்ஸ் and செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்

செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.

அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும். இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை. நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.

ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.

வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார். வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.

அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.

உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.

அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.

அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.

========================================
அந்த பாருக்கு குட்டி முதலையுடன் ஒரு இளைஞன் வந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து, நான் எனது ஆணுறுப்பை முதலையின் வாயில் ஒரு நிமிடம் வைத்திருப்பேன். பின்னர் பத்திரமாக வெளியே எடுப்பேன். அப்படி பத்திரமாக நான் எடுத்தால், அந்த தைரியத்திற்காக எனக்கு நீங்கள் எல்லாம் மது வாங்கித் தர வேண்டும். டீலுக்கு ரெடியா என்றான்.

அதைக்கேட்டு கூட்டம் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தது. இருந்தாலும் சரி என்று ஒத்துக் கொண்டது. இதையடுத்து அந்த இளைஞன் தனது டிரஸ்ஸைக் கழற்றினான். பின்னர் முதலையின் வாயில் தனது ஆணுறுப்பை வைத்தான். இதைக் கூட்டமே பதைபதைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தது. அந்த வாலிபன் ஒரு பீர் பாட்டிலை எடுத்து முதலையின் தலையில் ஓங்கி அடித்தான். முதலை வாய் திறந்தது. அவனும் பத்திரமாக தனது ஆணுறுப்பை வெளியில் எடுத்தான்.

இதைப் பார்த்து வியந்த கூட்டத்தினர் அவனுக்கு சொன்னடி மது வாங்கித் தந்தனர். இதையடுத்து அவன் , வேறுயாராவது இப்படிச் செய்யத் தயாரா.. நான் 100 டாலர் தருகிறேன் என்றான்.

அதைக்கேட்டு கூட்டத்தில் அமைதி நிலவியது. அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவள் சொன்னாள்… நான் தயாராக இருக்கிறேன், ஆனால் என் தலையில் பீர் பாட்டிலால் அடிக்கக் கூடாது…..!!!!!!

 

என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

நிஜமாவா, எப்படி?

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!’…

===========

அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே??

ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே?…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..!!??
================
ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:
“”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.
அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது”

கணவன் நிதானமாகச் சொன்னான்:
“”கவலைப்படாதே… வேறு நாய் வாங்கிக்கலாம்”
===============
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்துவிட்டது …

ஆசிரியர் மாணவர்களிடம் : யாருடா .. இது, நியூ அட்மிஷனா ?

மாண்வர்கள் ஆசிரியரிடம் : இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு…. ன்னு தோணுது…
=================
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..!
” கொழுப்பு”..
===============
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

பேஷண்ட் நெஞ்சை விரலால் தட்டிப் பார்த்து
இருதயத்தில் ஓட்டை என்கிறாரே?
================
அப்பா; படிக்கற வயசுலே உனக்கு எதுக்கடா செல்போன்
வாங்கித் தரணும்?

சரி, அப்ப நான் படிக்கலை! செல்போன் வாங்கிக் கொடுங்க!
==================
குடிச்சிட்டு ஏன்யா வண்டி ஓட்டறே?

குடிக்கலைன்னா…..தான் என் கை நடுங்கும், ஆக்ஸிடென்டு…….ஆயிடும் சார்!
===============

மந்திரி : மன்னா! தங்களைப் புகழ்ந்து பாட புலவர் சொக்கன்
வந்துள்ளார்!

மன்னன் : கஜானா காலி, வேண்டுமானால் கடனுக்குப் பாடிவிட்டு போகச் சொல்!
(கடனுக்கு வேண்டுமானால் பாடு
என செய்தி சொன்ன மந்திரியிடம்
சம்மதம் கூறி உள்ளே வந்த புலவன்…)

“மன்னா உன் மேல்மாடி காலி..உலகறிந்தது…
காசில்லாமல் கஜானா காலி என்பது நானறிந்தது…
மன்னா..நீயும் போனே…வீணா..
என உலகம் கூறும்..காசு குடுக்காம போனா… ”
என பாட துவங்க…
யோவ்..எந்த கருமாந்திரத்தையாவது..
குடுத்து விரட்டுய்யா..இந்த ஆள.. என..மன்னர் சூடானார்..
என்பது பின்கதை..)
=====================
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?

மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?

கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
=======================
புதுமுகத்தைப் போட்டதால ஜெயிலுக்கு வந்துட்டீங்களா, ஏன்?

ரூபாய் நோட்டுல காந்திக்குப் பதிலா வேற ஒருத்தரைப் போட்டு அச்சடிச்சேன், அதான்!
=============
டாக்டர்: எதுக்கு நாதஸ்வரத்தைக் கொண்டுவந்து என்கிட்டே காட்டுறீங்க…?

வித்வான்: நீங்கதானே என்னோட பீப்பி பார்க்கணும்னு சொன்னீங்க..
=====================
தலை தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?

பின்னே….அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும் மட்டுமே பேசினா….கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!
===================
எந்தக் கொம்பனாலும் எழுதப் படிக்க
முடியாத எழுத்து எது தெரியுமா?”

“தெரியலியே!”

“ தலை எழுத்து!”
===========
தலைவருக்கு லொள்ளு ஜாஸ்தி!

ஏன்?

குழந்தைக்கு பெயர் வைக்க சொன்னால்
குழந்தையோட அம்மாவுக்கு ‘நமீதா’-ன்னு
பட்டப் பெயர் வைக்கிறாரே!
===========
அந்த கதாசிரியர் எந்த நேரமும் காதுல பஞ்சு
வச்சுக்கிட்டு எழுதுராறே ஏன்?

சூ, சத்தம் போடாதே! அவர் பஞ்சு டயலாக்
எழுதுராறரு!
=======================
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே…

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

============
எல்லா படத்துலயும் இன்ஸ்பெக்டர் வேஷத்துல நடிச்சது நல்லதாப் போச்சு…”

“ஏன்…?”

“கபாலி எனக்கும் மாமூல் தர ஆரம்பிச்சுட்டான்!”
==============
“கபாலிக்கு நேத்தைக்கு பிறந்த நாள் போலிருக்கு ஏட்டய்யா…”

“நேத்து திருடு போன வீட்டுல, பலூன் கட்டி, கேக் வெட்டினதுக்கான எவிடென்ஸ் கிடைச்சிருக்கு…!”
==================